துறையூர் ஜூலை-15
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள காளிப்பட்டி சுதர்சனா பாலிடெக்னிக் கல்லூரியில் 2027 ஆண்டிற்கான இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் மேற்பார்வையாளர் பணி தொடர்பாக பயிற்சியில் கலந்து கொண்ட களப்பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு ஐடி கார்டு,எழுது பொருட்கள், நோட் உள்ளிட்ட உபகரணங்கள் அடங்கிய “பேக்” வழங்கப்பட்டது.

10-07-2026 அன்று துறையூர் வட்டாட்சியர் சிவகுமார் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கான பயிற்சியை துவக்கி வைத்தார்.தொடர்ந்து முதல் கட்டமாக ஜூலை 10 முதல் 15ந்தேதி வரை 100 களப்பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களும், 2ஆம் கட்டமாக ஜூலை 13ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை 369 களப்பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களும் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். வட்டாட்சியர் சித்ரா ஆலோசனை படி வட்ட வழங்கல் அலுவலர் சுந்தரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு ஐடி கார்டு,எழுது பொருட்கள், நோட் உள்ளிட்ட உபகரணங்கள் அடங்கிய காம்போ “பேக்” வழங்கப்பட்டது.இப்பயிற்சியில் துறையூர் நகராட்சி மற்றும் துறையூர் ஊராட்சிக்குட்பட்ட கிராமங்கள், பாலகிருஷ்ணம்பட்டி பேரூராட்சி, உப்பிலியபுரம் பேரூராட்சி ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.இதில் வருவாய் ஆய்வாளர் இளவரசி, பிரகாஷ் ,கிராம நிர்வாக அலுவலர்கள், நகராட்சி அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *