எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில், மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 குறித்த விழிப்புணர்வுப் பேரணி இன்று நடைபெற்றது.இந்த விழிப்புணர்வுப் பேரணியை சீர்காழி கோட்டாட்சியர் பாலமுருகன் மற்றும் மாவட்டத் துணை காவல் கண்காணிப்பாளர் சரவணன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
சீர்காழி காவல் நிலையத்தில் தொடங்கிய இந்த விழிப்புணர்வுப் பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது. மருத்துவமனை சாலை மற்றும் மணிகுண்டு வழியாகச் சென்ற பேரணி, பழைய பேருந்து நிலையத்தை வந்தடைந்தது.மக்கள் தொகை கணக்கெடுப்பின் முக்கியத்துவத்தை பொதுமக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் நோக்கில் நடத்தப்பட்ட இந்தப் பேரணியில், சீர்காழி வட்டாட்சியர் ராஜரத்தினம், பெஸ்ட் கல்வி குழும தாளாளர் ராஜ்கமல் மற்றும் ராதா சமுதாய கல்லூரி மாணவிகள், பெஸ்ட் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.