வடலூர், ஜூலை.16-
வடலூர் சத்திய ஞானசபை முன் மண்டபத்தில், வடலூரை புனித நகரமாக மாற்றகோரி,
ஆன்மீக இயக்கம் சார்பில் ஆனிமாத பூசத்தை முன்னிட்டு, அகவல் பாராயண, விண்ணப்ப பிரார்த்தனை மற்றும் மாபெரும் டிஜிட்டல் மற்றும் நேரடி கையெழுத்து
இயக்கமும்நடைபெற்றது.


பார்வதிபுரம்ராமகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் சன்மார்க்க இயக்கத்தின் முக்கியப் பொறுப்பாளர்களும் சன்மார்க்க அன்பர்களுமானவிஜயலட்சுமிஅம்மா,
அஜந்தாஅம்மா,வினோத்குமார்,செந்நெறி தண்டபாணி,ஹரிகிருஷ்ணன்,சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் இயக்கத்தின் அனைத்து உறுப்பினர்களும், சன்மார்க்க அன்பர்களும் இந்த ஆன்மீக விழிப்புணர்வு நிகழ்வில் 150-க்கும் மேற்பட்ட அன்பர்கள் பக்தி பரவசத்துடன் கலந்துகொண்டு அகவல் பாராயணம் செய்தனர்.


தொடர்ந்து நடைபெற்ற மாபெரும் டிஜிட்டல் மற்றும் நேரடி கையெழுத்து இயக்கத்தில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் தங்களது கையெழுத்துகளைப்
பதிவுசெய்தனர். நிகழ்ச்சியில்
தாகம் தணித்த நன்னாரி சர்பத்தும், தூய்மையான குடிநீருடன்,வழங்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *