மாவட்ட செய்தியாளர் முகமது இப்ராகிம்

தென்காசி ஜூலை 15,

தென்காசி மாவட்டம் சுரண்டையில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 124வது பிறந்த நாளை முன்னிட்டு, தென்காசி தெற்கு மாவட்டம் சுரண்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் வே. ஜெயபாலன் அவர்கள் கலந்து கொண்டு, தென்காசி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கலைகதிரவன் அவர்களுடன் இணைந்து பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுத்தொகை வழங்கி பாராட்டினார்.

இந்நிகழ்வில் சுரண்டை நகரச் செயலாளர் ஏ.ஜி. கணேசன் அவர்கள், சுரண்டை நகரக் கழக நிர்வாகிகள், ஆசிரியர் பெருமக்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

விழாவில், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் கல்விச் சேவையும், மாணவர்களின் முன்னேற்றத்திற்காக அவர் ஆற்றிய அரும்பணிகளும் நினைவுகூரப்பட்டன.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *