பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்

பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் நாடார் உறவின் பேரவை அமைப்பு சார்பில் கர்ம வீரர் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் …

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் அய்யம்பேட்டை பேருந்து நிலையம் அருகில் உள்ள கர்மவீரர் காமராஜர் அவர்கள் சிலைக்கு 124 வது பிறந்த நாளை முன்னிட்டு அய்யம்பேட்டை நாடார் உறவின்முறை தலைவர் திரு செல்வராஜ் அவர்களால் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது அதனைத் தொடர்ந்து சங்க ஒருங்கிணைப்பாளர் திரு .எஸ். சின்னையன் நாடார் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்

இந்த நிகழ்வில் திரு .ஆத்திப்பழம் வைரமணி திரு தியாகராஜன் திரு கிருஷ்ணமூர்த்தி திரு கணேசன் திரு சேட்டு மற்றும் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள் சிறப்பு விருந்தினராக மாத்தூர் தர்மராஜ் நாடார் அவர்கள் பாண்டியன் நாடார் அவர்கள் கலந்து கொண்டார்கள் நன்றி உரை திரு வைரமணி அண்ணாச்சி அவர்கள் கூறினார்கள் மாணவ மாணவியர்களுக்கு மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி விழா நிறைவுற்றது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *