கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் நிதி சார் ஆலோசனை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் நிதி சார் ஆலோசனை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி நிறுவனம் செயலர் கம்பம் என். இராமகிருஷ்ணன் தலைமையில் கல்லூரி இணைச் செயலர் என்.எம்.ஆர். வசந்தன் கல்லூரி ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி வசந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் கல்லூரி முதல்வர் டாக்டர் ஜி ரேணுகா அனைவரையும் வரவேற்று பேசினார். தேனி நிதி சார் ஆலோசனை மையத்தின் மேலாளர் ஜி. நேதாஜி சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவிகள் இளம் பருவத்திலே சேமிப்பு பழக்கத்தை கடைப்பிடித்து வாழ்வில் நான் நினைத்து இலக்கை அடைய வேண்டும் என்று பேசினார்.

தேனி மாவட்டத்தின் கனரா வங்கி ஆலோசகர் பி. ஸ்ரீ முருகன் பேசும் போது பணத்தை எவ்வாறு முறையாக கையாள்வது வங்கியில் இணைய வழி பண பரிவர்த்தனை digital banking Grdit card debit card CTM .ATM.upl App RTGS. Education loan கல்விக்கடன் IBA. குறித்தும் இணைய வழியில் எவ்வாறு விண்ணப்பிப்பது இணையத்தை எவ்வாறு சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்று கல்லூரி மாணவிகளுக்கு விரிவான விளக்கமாக மாணவிகள் பயன்பெறும் விதமாக பயனுள்ள கருத்துக்களை பேசினார்.

மேலும் இது சம்பந்தமாக மாணவிகளின் கேள்விகளுக்கு அதற்குரிய விளக்கமான பதிலையும் உடனுக்குடன் பதில் அளித்தார். இந்த நிகழ்ச்சியில் அனைத்துத் துறை சார்ந்த மாணவிகளும் கல்லூரி பேராசிரியைகளும் பங்கேற்று விழிப்புணர்வு பெற்று பயனடைந்தனர் கல்லூரி பேரவை இணைச் செயலாளர் மூன்றாம் ஆண்டு ஆங்கிலத்துறை மாணவி பவதாரணி நன்றி கூறினார். கல்லூரி IQAC சங்க உறுப்பினர்கள் நிகிழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *