எஸ்.திருபாலா நிருபர் அந்தியூர்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வீ தி லீடர்ஸ் பவுண்டேஷன் சார்பில், போதையில்லா தமிழகத்தை உருவாக்குவதை வலியுறுத்தி, நம்ம அந்தியூர் விழிப்புணர்வு மராத்தான் ஓட்டம் நடந்தது. அந்தியூர் அடுத்த நகலுார்பிரிவு அருகிலுள்ள தனியார் மண்படத்திலிருந்து துவங்கிய ஓட்டத்தை, கோவை வசந்தராஜன் துவக்கி வைத்தார்.


அத்தாணி ரோட்டில் கரட்டூர் மேடு வரை சுமார் 5 கி.மீ., துாரம் வரை நடந்த ஓட்டத்தில், பெண்கள் பிரிவில் 1,800 பேரும், ஆண்கள் பிரிவில் 1,200 பேரும் கலந்து கொண்டனர். மராத்தான் ஓட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு டாக்டர் சங்கர் பரிசு வழங்கி பாராட்டினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *