அரியலூர் மாவட்ட எழுத்தாளர்கள் நல சங்கம் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் நினைவலைகள் என்னும் விழா சிறப்பாக நடந்தது விழாவில் ஓய்வு பெற்ற ஆசிரியர் அரியலூர் நல்லப்பன் பெருந்தலைவர் காமராஜரின் சிறப்புகள் குறித்து விளக்கி பேசினார்
காமராஜர் இந்த நாட்டிற்கு செய்த தொண்டுகள் அவர் ஆட்சியில் இருந்தபோது செய்த மாபெரும் பணிகள் ஆகியவை குறித்து பேசினார். விழாவில் மூத்த காங்கிரஸ் தலைவர் அரியலூர் பாலகிருஷ்ணன், புலவர்இளங்கோ, கவிமுரசுராஜாராம் உட்பட பலர் சிறப்புரை ஆற்றினார்கள். விழாவில் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சிகள் மாணவ மாணவிகளின் பேச்சுப் போட்டிகள் ஆகியவைகள் நடந்தது அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன முன்னதாக பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு அனைவரும் மலர் அஞ்சலி செலுத்தினார்கள்