அகில இந்திய அளவில் முதல் 10 தரவரிசையில் 2 இடங்கள்; கோவை மாணவர்களும் முன்னனி தர வரிசையில் இடம் பிடித்து அசத்தல்

அண்மையில் மருத்துவ படிப்பிற்கான நுழைவு தேர்வாக தேசிய தேர்வு முகமை நடத்திய நீட் தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டனஇதில் ஸ்ரீ சைதன்யா கல்வி நிறுவனங்கள் நாடு முழுவதும் மீண்டும் ஒரு முறை சிறப்பான சாதனையைப் படைத்துள்ளது.

அகில இந்திய அளவில் வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியலில், உபலக்ஷ்யா கோயல் 3-வது இடத்தையும், கவுரவ் சிங் 9-வது இடத்தையும் பெற்று கல்வி நிறுவனத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.மேலும், அகில இந்திய அளவில் முதல் 100 தரவரிசையில் 17 மாணவர்களும், முதல் 1000 தரவரிசையில் 85 மாணவர்களும் இடம்பெற்று குறிப்பிடத்தக்க சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

அதேபோல், ஸ்ரீ சைதன்யா கோவை மண்டல மாணவர்களும் நீட் தேர்வில் சிறப்பான தரவரிசைகளை பெற்றுள்ளனர்.இதில், செல்வநித்தீஷ் அகில இந்திய தரவரிசை 287, தேவேஷ் கார்த்திக் 291, சுதர்சன் 393, ஸ்ரீகிருஷ்ணா 521, தருண் 754 மற்றும் நாகபூபதி 823-வது தரவரிசைகளைப் பெற்று கோவைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இந்நிலையில் நீட் தேர்வில் குறிப்பிடதக்க சாரனையை செய்த மாணவர்களுக்கான பாராட்டு விழா காளப்பட்டி பகுதியில் உள்ள ஸ்ரீ சைதன்யா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் 550-க்கு மேற்பட்ட மதிப்பெண்களைப் பெற்றுள்ள நிலையில், 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேரும் வாய்ப்பைப் பெற்றுள்ளதாக பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்..

நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஸ்ரீ சைதன்யா கல்வி நிறுவனங்களின் இயக்குநர் திருமதி சுஷ்மா போப்பனா, நாகேந்திரா மற்றும் தமிழ்நாடு செயல்பாட்டு தலைவர் ஹரிபாபு மற்றும் ஏ.ஜி.எம்.நாகேஸ்வர ராவ்,ஆர்.ஐ.பாலகிருஷ்ணன் “நீட் 2026 தேர்வில் மாணவர்கள் பெற்றுள்ள இந்த சிறப்பான வெற்றி, அவர்களின் கடின உழைப்பு, பெற்றோரின் ஒத்துழைப்பு மற்றும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பான பயிற்சியின் பலன் எனவும் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்தனர்…

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *