கம்பம் நகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்பார்வையாளருக்கான பயிற்சி முகாம்
தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 2027 இல் நடைபெற உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளருக்கான முதல் நாள் பயிற்சி வகுப்பு (கம்பம் நகராட்சி சமுதாய கூட்டத்தில் நகராட்சி நகர் மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் தலைமையில் நகராட்சி ஆணையளர் உமாசங்கர் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த பயிற்சி முகாமில் உத்தமபாளையம் புள்ளியியல் ஆய்வாளர் கே சரவணகுமார் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு மக்கள் தொகை புள்ளி விபரம் பற்றியும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒவ்வொரு வீடு வீடாக சென்று எவ்வாறு கணக்கெடுப்பு நடத்த வேண்டும் போன்ற பல்வேறு ஆலோசனைகள் இந்த முகாமில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டன.