தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தாவிடம் ஏ டி எஸ் பி மீது புகார்.
விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் தமிழக முதலமைச்சரை அவதூறாக பேசியதாக திங்கட்கிழமை காலை குற்றப்பிரிவு போலீசார் மார்க்கண்டேயன் எம்எல்ஏ வை கைது செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் கொண்டு வந்து விசாரணை செய்தனர். விசாரணை முடிந்து இரவு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்கு மார்க்கண்டேயன் எம் எல் ஏ வை கொண்டு வந்தபோது செய்தியாளர்கள் வீடியோ மற்றும் போட்டோ எடுக்க முயன்ற போது மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திபு பத்திரிக்கையாளரை மிகவும் கீழ்த்தரமாகவும் ஒருமையில் பேசினார்.
மேலும் ரவுடி போல ஏடிஎஸ்பி திபு நாக்கை துருத்தி கொண்டு என்ன செய்ய வேண்டும் அடித்து பார்ப்போமா என்று மிகவும் மோசமாக நடந்து கொண்டார் செய்தியாளர்கள் தங்களுடைய கடமைகளை பணியாற்றிய போது மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திபு மிகவும் பத்திரிக்கையாளர்களிடம் தரக்குறைவாக நடந்து கொண்டது மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலேயே மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் திபு கற்கும் செய்தியாளர்களுக்கும் கடும் வாக்குவாதம் மோதல் ஏற்பட்டது மார்க்கண்டேயன் எம் எல் ஏ மருத்துவ பரிசோதனை முடித்து சென்ற பின்பு கிளம்ப தயாரான மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் திபு காரில் ஏறி கிளம்பும்போது பத்திரிக்கையாளர்கள் அனைவரும் ஒன்று கூடி எதிர்ப்பு தெரிவித்தனர்
பின்வாங்கு இருந்த காவல்துறையினர் ஒட்டுமொத்தமாக சேர்ந்து பத்திரிக்கையாளரை ஒதுக்குப்புறமாக அனுப்பி வைத்துவிட்டு மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் செல்ல அனுமதிக்கப்பட்டது
இதனை அடுத்து தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் ஒன்று சேர்ந்து செவ்வாய்க்கிழமை காலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தாவை நேரில் சந்தித்து மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் திபு நடந்து கொண்ட விதம் பற்றி எடுத்துரைத்தனர் அப்போது பத்திரிக்கையாளர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷே குப்தா கூறுகையில் வரும் காலங்களில் இது போல ஒரு நிகழ்வு நடைபெறாமல் பார்த்துக் கொள்கிறேன்
காவல்துறையினருக்கும் பத்திரிக்கையாளர்களுக்கும் ஒரு நெருக்கமான உறவு வேண்டும் அதற்குத் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் வரும் மாதங்களில் மாதத்தில் ஒரு நாள் பத்திரிக்கையாளர் காவல்துறையினர் நட்புணர்வு இருக்கும் வகையில் கலந்துரையாடல் நடத்தப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா கூறினார் இந்த நிகழ்ச்சியில் சண்முகசுந்தரம், காட்சன். மோகன்ராஜ். ராஜா சிதம்பரம். அண்ணாதுரை. முத்துராமன். ராஜன். விஜயகாந்த். ராமச்சந்திரன் மாரிமுத்து. மணிகண்டன். ராஜ். விஜய். உள்ளிட்ட பத்திரிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்