காரைக்கால், ஜூலை 22:

இந்திய அரசின் Bureau of Indian Standards (BIS) சார்பில் SHINE (Standards Help Inform & Nurture Empowered Women) திட்டத்தின் கீழ், செல்லூர் பஞ்சாயத்து பகுதியில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கான விழிப்புணர்வு மற்றும் பயிற்சி நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு FEDCOT INDIA – Consumer Movement, Puducherry அமைப்பின் காரைக்கால் மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் திரு. திருமுருகன் தலைமை வகித்தார். மதர் தெரசா நர்சிங் கல்லூரி முதல்வர் முனைவர் ஜெயபாரதி, கிராம சேவாக் திருமதி சங்கரி, FEDCOT INDIA மாநிலச் செயலாளர் எஸ். சிவக்குமார் மற்றும் முனைவர் ஜோதி (புஷ்பவள்ளி) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பயிற்சியில் உணவுக் கலப்படத்தை எளிய முறையில் கண்டறிவது, BIS CARE App-ஐ பயன்படுத்தும் முறை, ISI தரச்சின்னத்தின் முக்கியத்துவம், தரமான மருத்துவ சானிட்டரி நாப்கின்களைத் தேர்வு செய்து பாதுகாப்பாகப் பயன்படுத்தும் வழிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் விரிவான விளக்கங்களும் செயல்முறைப் பயிற்சிகளும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட வட்டார வளர்ச்சி மேலாளர் திருமதி சன்மதி, வரிச்சிக்குடி மகளிர் சுய உதவிக்குழு தலைவர், செயலாளர் மற்றும் நுகர்வோர் பொறுப்பாளர்கள், திருநள்ளாறு தொகுதி தலைவர் வீரமணி, செயலாளர் அருள் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.

இந்நிகழ்ச்சியில் செல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு பயிற்சியில் பயனடைந்தனர்.

நன்றி

எஸ். சிவக்குமார்
BIS Trainer
Bureau of Indian Standards (Government of India)

State Secretary
FEDCOT INDIA – Consumer Movement, Puducherry

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *