தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ. லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர், ஜூலை- 23. தஞ்சை பெரியக் கோவில் கட்டட கலைக்கும், சிற்ப கலைக்கும் உலகப்புகழ் பெற்ற எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறது.
இத்தகைய சிறப்புமிக்க கோவிலின் அழகை காணவும், பெருவுடையாரை தரிசனம் செய்யவும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
தற்போது பெரியக் கோவிலில் ஆஷாட நவராத்திரி விழா நடைபெறுவதால் வராஹி அம்மனை தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் வந்திருந்த நிலையில், அங்கு யாகம் நடைபெறும் போது வெளியேறிய புகையால் கோவிலில் கூடு கட்டி இருந்த கதண்டுகள் பறக்க தொடங்கி அந்த இடத்தில் நின்று இருந்தவர்களை கடித்ததால் பக்தர்கள் துணியை தலையில் போர்த்தியபடி முகத்தை மறைத்து கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர்.
கதண்டு கடித்ததில் ஆந்திரா மாநிலம் உத்தமநல்லூர் பகுதியை சேர்ந்த நாராயணன் ஹேமாவதி சுபலட்சுமி உள்ளிட்ட 4 பேர் மயக்கம் அடைந்தனர். மயக்கம் அடைந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனத்தில் முதல் உதவி அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.