காங்கேயம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி காங்கயத்தில் ஆர்ப்பாட்டம்.!

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி காங்கயத்தில் வியாழக்கிழமை மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காங்கயம் நகரப் பேருந்து நிலைய வளாகத்தில், புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பின் காங்கயம் நிர்வாகி ஸ்டாலின் தலைமை வகித்தார். இதில் மருத்துவம் படிக்க நினைக்கும் மாணவர்களை வெகுவாக பாதிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்ய வேண்டும், மாணவர்கள் மீதான அடக்குமுறைகளை நிறுத்த வேண்டும், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினர்.

இந்த நிகழ்ச்சியில் புரட்சிகர இளைஞர் முன்னணியின் காங்கயம் பகுதி நிர்வாகிகள் கவி, சவுந்தர்ராஜன், திருமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *