தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
திருப்பூர் ஒட்டன்சத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் தாராபுரம் அருகே வேப்பமரங்கள் அகற்றிய மின்வாரிய அதிகாரி மீது நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார்.
திருப்பூர் ஒட்டன்சத்திரம் தேசிய நெடுஞ்சாலை எண் 37 (NH-37) நான்கு வழிச்சாலையில், அமைக்கப்பட்டு மூன்றாண்டுகளாக மரங்களை வைத்து பராமரித்து வந்த நிலையில் தாராபுரம் அருகே வேங்கிபாளையம் உள்ள கரட்டங்காடு மேடு பகுதியில் சாலையோரம் இருந்த வேப்பமரங்கள் அனுமதியும் இல்லாமல் மின்வாரிய அதிகாரிகள் வெட்டி அகற்றப்பட்டதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் குற்றம் சுமத்தி குண்டடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் .
தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கண்ட்ரோலில் உள்ள வேப்ப மரங்களை மின்வாரிய அதிகாரிகள் எந்தவித அனுமதியும் பெறாமல் அவற்றை வேரோடு அகற்றியதாக நெடுஞ்சாலைத்துறை தரப்பில் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், மரங்களை அகற்றிய சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும், சாலை பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வரும் ஆர்.சி.சி.எல். (RCCL) என்ற தனியார் நிறுவன அதிகாரி பாபு என்பவர் குண்டடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் இந்த புகாரில் தேசிய நெடுஞ்சாலையில் எங்கள் பராமரிப்பில் உள்ள வேப்ப மரங்களை மின்வாரிய அதிகாரிகள் அனுமதி இல்லாமல் வேப்ப மரங்களை வேரோடு வெட்டி அகற்றிய உதவி மின் பொறியாளர் சுகுமார் முருகேசன் மட்டும் தங்கவேல் ஆகிய மூன்று நபர்கள் மரங்களை அடியோடு வெட்டி சாய்த்து உள்ளனர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் அளித்ததாக மனுவில் கூறப்பட்டுள்ளது இது தொடர்பாக குண்டடம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து முதல் தகவல் அறிக்கை வாங்கியுள்ளனர் தேசிய நெடுஞ்சாலையில் வேப்ப மரங்களை வெட்டிய இரு துறை அதிகாரிகள் இடையே காவல் நிலையத்தில் புகார் அளித்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்பட்டு உள்ளது.