மதுரை தானம் அறக்கட்டளை ,மதுரை கிராமப்புற மண்டலம், பாலமேடு வட்டார களஞ்சியம் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மூலம் பாலமேடு நாயுடு மஹாலில் இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.

இதில் 220 பேருக்கு கண் ப‌ரிசோதனை செய்யப்பட்டது. 35 பேர் கண் ஆபரேசனுக்கு தகுதி பெற்றவர்களாக இருந்தனர். 30 பேர் அரவிந்த் கண் மருத்துவ சிகிச்சைக்காக பரிந்துரை செய்தனர். 40 பேர் கண் கண்ணாடி வாங்கி பயனடைந்தனர். அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் தலைமையிலான மருத்துவக்குழு வந்திருந்தனர். அரவிந்த் கண் மருத்துவமனை முகாம் ஒருங்கிணைப்பாளர் முருகேசன், மதுரை கிராமப்புற மண்டல சுகாதார ஒருங்கிணைப்பாளர் திரு. முத்தையா அவர்களின் வழிகாட்டலின்படி பாலமேடு வட்டார களஞ்சிய ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன், நாகரத்தினம், சுகாதார ஒருங்கிணைப்பாளர் வினோதினி , பணியாளர்கள் மற்றும் களஞ்சிய நிர்வாக உறுப்பினர்கள் முகாமை ஒருங்கிணைத்து சிறப்பாக நடத்தப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *