தேனி மாவட்டம் வீரபாண்டி பேரூராட்சி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பல்வேறு துறைகளின் சார்பில் ரூபாய் 8 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 15 புதிய கட்டடங்களை திறந்து வைத்து 7873 பயனாளிகளுக்கு ரூபாய் 57.77. கோடி மதிப்பீலான அரசின் நலத்திட்ட உதவிகளை எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் அவர்கள் மாவட்ட ஆட்சியர் இரா. வைத்திநாதன் முன்னிலையில் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து கூட்டுறவுத் துறையின் சார்பில் மலை கிராம மக்கள் விரைவாகவும் எளிதாகவும் அத்தியாவசியப் பொருட்களை பெற்று பயன்பெறும் வகையில் போடிநாயக்கனூர் தாலுகாவிற்கு உட்பட்ட 34 மலை கிராமங்களுக்கு ஏற்கனவே 20 நகரும் நியாய விலை கடைகள் மூலமாக குடிமைப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது மேலும் தற்போது ஆண்டிபட்டி தாலுகாவிற்கு உட்பட்ட 24 மலை கிராம மக்கள் பயன்பெறும் வகையில் 8 நகரும் நியாய விலை கடைகளின் சேவைகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் அர்ப்பணித்தார் முன்னதாக இந்திய அரசின் கீர்த்தி சக்ரா விருது பெற்ற காமய கவுண்டன்பட்டியை சேர்ந்த இராணுவ வீரர் லாரன்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரம் அவர்களுக்கு விலையில்லா வீட்டு மனை பட்டாவை வழங்கி பயங்கரவாதிகளுக்கு எதிரான அவரின் வீர தீர செயலுக்கு அமைச்சர் பாராட்டுக்களை தெரிவித்தார்
இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் கம்பம் பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா பெரியகுளம் சபரி ஐங்கரன் மாவட்ட வருவாய் அலுவலர் ப ராஜகுமார் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் வில்லியம் ஜேசுதாஸ் திட்ட இயக்குனர் மகளிர் திட்டம் வீராச்சாமி வருவாய் கோட்டாட்சியர்கள் உத்தமபாளையம் சையது முகைதீன் இப்ராஹிம் பெரியகுளம் கவிதா தேனி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் பாண்டி மற்றும் பல்வேறு துறை சார்ந்த மாவட்ட நிலையிலான அரசு அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.