கோவை,, பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் ஆட்டோமொபைல், சிவில், மெக்கானிக்கல், மெட்டலர்ஜிக்கல் மற்றும் புரொடக்ஷன் பொறியியல் பிரிவுகளுக்கான விருதுகள் வழங்கும் விழா நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெற்றது.பி.எஸ்.ஜி.அண்ட் சன்ஸ் அறக்கட்டளையின் அறங்காவலர் எல். கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற விழாவில், கல்லூரி முதல்வர் (முழு கூடுதல் பொறுப்பு) முனைவர் பி. ஆர். தைலா,விழாவிற்கு வந்த அனைவரையும் வரவேற்று பேசினார்..
விழாவில் சிறப்பு விருந்தினராக ஃபெடரல் வங்கியின் முன்னாள் மேலாண்மை இயக்குநரும் முதன்மை செயல் அதிகாரியும், இந்திய ரிசர்வ் வங்கியின் ஒழுங்குமுறை ஆலோசனைக் குழு உறுப்பினரும், டிவிஎஸ் கேபிட்டல் ஃபண்ட்ஸ் நிறுவனத்தின் மூத்த ஆலோசகரும் ஆன ஷியாம் சீனிவாசன் கலந்து கொண்டு பொறியியல் பட்டபடிப்புகளை முடித்த, 469 இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்குப் பட்டச் சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தார்..
முன்னதாக விழாவில் பேசிய அவர்,பொறியியலை ஒரு வாழ்க்கைத் திறனாகவும், வாழ்நாள் முழுவதும் கற்றுக் கொள்வதற்கான ஒரு அடித்தளமாகவும் கருதுமாறு மாணவர்களை அவர் ஊக்குவித்தார்.மேலும், திறமையை விட மனவுறுதிக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், முடிவுகளைப் பற்றி அதிகம் கவலைப்படாமல் முயற்சியில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
விழாவில் துறை தலைவர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்….