விருதுநகர் மாவட்டம், சிவகாசி தாலுகா, சல்வார்பட்டியில் இயங்கி வரும் மதுரை சி.இ.ஓ.ஏ. பதின்ம மேல்நிலைப் பள்ளியில், தமிழ் துறை சார்பில் முத்தமிழ் மன்ற விழா இன்று நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சி புகழ் V. கருப்பசாமி கலந்து கொண்டு, மாணவர்களிடையே தமிழின் பெருமை, இலக்கியத்தின் சிறப்பு மற்றும் வாழ்வியல் விழுமியங்கள் குறித்து சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சிக்கு பள்ளியின் இயக்குநர் மு. பாக்கியநாதன் தலைமை வகித்து உரையாற்றினார். பள்ளியின் முதல்வர் தாட்சாயினி தேவி மற்றும் உதவித் தலைமை ஆசிரியர் ராஜா ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விழாவில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *