தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் கல்லூரி சங்கம் சார்பாக மறைந்த மாமேதை டாக்டர் ஏபிஜெ அப்துல் கலாம் நினைவு தினம் கல்லூரி நிறுவனச் செயலாளர் கம்பம் என் ராமகிருஷ்ணன் தலைமையில் கல்லூரி இணைச் செயலர் என் எம்.ஆர்
வசந்தன் கல்லூரி ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி வசந்தன் கல்லூரி முதல்வர் டாக்டர் ஜி ரேணுகா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது
கல்லூரி நிறுவனச் செயலர் கல்லூரி இணைச் செயலர் கல்லூரியின் ஒருங்கிணைப்பாளர் கல்லூரி முதல்வர் ஆகியோர் டாக்டர் மறைந்த மாமேதை ஏபிஜெ அப்துல் கலாம் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள் இதனை தொடர்ந்து பேச்சுப்போட்டி நடத்தப்பட்டு சிறந்த பேச்சாளர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் அனைத்து துறை சார்ந்த பேராசிரியர்களும் மாணவிகளும் கலந்து கொண்டனர்