அரியலூர் ராயல் சென்டினியல் அரிமா சங்கம் சார்பில், அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.35 ஆயிரம் மதிப்பிலான 10 சோலார் மின் விளக்குகள் வழங்கப்பட்டன.
இந்த நலத்திட்ட உதவியை மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் முத்துகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் மருத்துவர் அரிமா ஆர்.எம்.ஓ. கொளஞ்சிநாதன் மற்றும் மருத்துவர் அரிமா ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் ராயல் சென்டினியல் அரிமா சங்கத் தலைவர் அரிமா சக்திவேல், செயலாளர் பொறியாளர் புகழேந்தி, பொறியாளர் பாலசுப்பிரமணியம், முன்னாள் தலைவர் ஆனந்த், மாலா தமிழரசன், பவுன்ராஜ், APN ஜவுளி ஸ்டோர் உரிமையாளர் அரிமா ராஜா, அரிமா முத்தையா செட்டியார் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
சமூக நலப்பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் ராயல் சென்டினியல் அரிமா சங்கத்தின் இச்சேவையை மருத்துவக் கல்லூரி நிர்வாகம் பாராட்டி நன்றி தெரிவித்தது.