கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட் முதல் பிரிவில் வசித்துவரும் அசோகன் கவிதா தம்பதியரின் மகள் ஜீவிதாதேவி இவரது கணவர் ராஜா வயது 39, கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து வசித்து வந்தனர் இந்நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதியன்று மது போதையில் அக்காமலை எஸ்டேட்டிற்கு சென்ற ராஜா மனைவி ஜீவிதா தேவியை தகாத வார்த்தைகளால் திட்டிய தோடு அரிவாளால் வெட்டி கொலைமிரட்டல் விடுத்துள்ளார் அதைத்தொடர்ந்து கையில் கொண்டு சென்ற மண்ணெண்ணெயை வீட்டின் மீது ஊற்றி தீ வைத்துள்ளார் இச்சம்பவம் குறித்து ஜீவி தாதேவி வால்பாறை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார் இந்த வழக்கு தொடர்பான விசாரணை வால்பாறை நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் 27 ஆம் தேதியன்று தீர்ப்பு கூறப்பட்டது
இந்த தீர்ப்பில் பல்வேறு பிரிவுகளின் கீழ் ராஜாவிற்கு 10 ஆண்டுகள் மற்றும் மூன்று மாதம் சிறைத் தண்டனையும் 36 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி மீனாட்சி தீர்ப்பு கூறினார் இதைத் தொடர்ந்து ராஜாவை கைது செய்த காவல்துறையினர் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்