வருசநாடு அருகே மலை கிராம மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும் தேனி எம் பி மனு
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக பகுதிகளில் உள்ள வன ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்ற சுப்ரீம் கோர்ட் அண்மையில் தீர்ப்பளித்தது இந்த தீர்ப்பு வருச நாடு மற்றும் இதனை சுற்றியுள்ள 30 க்கும் மேற்பட்ட மலை கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருசநாடு மற்றும் இதனை சுற்றியுள்ள மலை கிராம மக்கள் கடையடைப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்
மேலும் தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர் இந்த நிலையில் மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவை சந்தித்த தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி மனு அளித்தார்
மனு விவரம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் அறிவிக்கப்பட்ட அதன் நோக்கம் பல்லுயிர் பெருக்கத்தையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் வலுப்படுத்துவதற்கு மட்டுமே பல்வேறு தலைமுறைகளாக விவசாயிகள் விவசாயம் செய்து வரும் மற்றும் விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பது அல்ல மீண்டும் பட்டா நிலங்களுக்கும் வன ஆக்கிரமிப்பு நிலங்களுக்கும் இடையே முறையான வேறுபாடு காட்டப்படாமல் பட்டா நிலங்களில் உள்ள கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது
விவசாய விளைநிலங்களுக்கு செல்லும் பாதைகள் அடைக்கப்பட்டுள்ளதால் அந்தப் பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதனைத் தொடர்ந்து மலை கிராம மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை நிறுத்தி மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது இந்த மனுவை பெற்றுக் கொண்ட மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுப்பதுடன் சம்பந்தப்பட்ட மலை கிராமங்களுக்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொள்வதாக உறுதி அளித்துள்ளார்