மன்னார்குடி., ஜூலை 29

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சோழப்பாண்டி கிராமம் உள்ளது இந்த கிராமத்தில் ஊராட்சிக்கு சொந்தமான திருத்தினாகுளம் உள்ளது 7 ஏக்கர் பரப்பளவில் உள்ள குளத்தை அருகில் உள்ள 10க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர் இந்நிலையில் இந்த குளம் 14 வருடங்களாக தூர்வாராமல் இழுக்கடிக்கபட்டு வந்ததது.

திருத்தினாகுளத்தை தூர்வாரிட வேண்டும் என பல முறை அப்பகுதி கிராம பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்த இந்நிலையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வில்லை ஆனால் இந்தாண்டு கிராம பொது மக்கள் ஒன்றினைந்து குளத்தை தூர்வாரி பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கிராமமக்கள் முடிவு செய்து

மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளிடம் முறையாக அனுமதி பெற்று தூர் வாரும் பணியை ஜேசிபி டிராக்டர் உதவியுடன் மேற்கொண்டு வந்த நிலையில் மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியருக்கு அதே கிராமத்தை சேர்ந்த இரண்டு பேர் சோழப்பாண்டி திருத்தினாகுளம் தூர்வாரி வண்டல் மண் எடுத்து விற்பனை செய்வதாக கூறி தூர் வாரும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் , வட்டாட்சியர் திருத்தினாங்குளம் உரிய அனுமதி பெற்று தான் தூர்வாருவதாக மண் எடுத்து விற்பனை செய்ய கூடாது என கிராம பொதுமக்களிடம் அறிவுறுத்தினார்கள்.

அதனைத்தொடர்ந்து 14 ஆண்டுகளுக்கு பிறகு திருத்தினாங்குளம் தூர்வாரும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது இதுகுறித்து கிராம பொதுமக்கள் கூறுகையில் கிராம பொதுமக்கள் கூட்டம் போட்டு பேசி ஆலோசித்து ஒன்றினைந்து நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக அரசு அனுமதியுடன் திருத்தினாங்குளம் தூர்வாரபட்டு வருகிறது.

இந்த குளத்து பகுதியில் கரையோரங்களை பலபடுத்தி பள்ளமாக உள்ள இடங்களில் தூர் வாரிய மண்னை கொட்டி சமம்படுத்துவதற்காகவும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த குளத்தை தூர்வார கூடாது என்பதற்காகவும் மண்ணை தனியாருக்கு விற்கும் நோக்கத்தோடு அதே கிராமத்தை சேர்ந்த இரண்டு பேர் பொய்யான தகவலை அவதூர்களை பரப்பி வருகின்றனர்.

அவர்கள் மீது தலையாமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது புகார் குறித்து மாவட்ட ஆட்சியர் , காவல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *