தூத்துக்குடி மாநகர மீனவர் காங்கிரஸ் நிர்வாகிகள், மீனவர் சமூகத்தின் நலன் மற்றும் முன்னேற்றம் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள ஒருங்கிணைந்த இணை இயக்குனர் அலுவலகத்தில் இணை இயக்குனர் இளம் வழுதி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

இந்த சந்திப்பில், மாநகர மீனவர் காங்கிரஸ் தலைவர் எம். சிமியோன், தூத்துக்குடி மாநகர மாவட்ட பொது செயலாளர் புல்டன் ஜெசின், மாநகர மீனவர் காங்கிரஸ் துணைத் தலைவர்கள் சேவியரம்மாள், அந்தோணிசாமி, ஏ. சகாயராஜ் மற்றும் பொருளாளர் ஜெ. சகாய புஷ்பராஜ் உள்ளிட்டோர் சந்தித்தனர்.

அப்போது, மீனவர் சமூகத்திற்கு தேவையான நலத்திட்டங்கள், சலுகைகள் மற்றும் அரசின் ஆதரவுகளை விரிவுப்படுத்த வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இதற்கு பதிலளித்த இணை இயக்குனர் இளம் வழுதி அவர்கள், மீனவர்களுக்காக ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் மற்றும் சலுகைகள் குறித்து விளக்கமளித்தார். மேலும், மீனவர் சமூகத்தின் நலனை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.

இந்த சந்திப்பு மீனவர் சமூகத்தின் நலன் சார்ந்த கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் பயனுள்ளதாக அமைந்ததாக மாநகர மீனவர் காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *