தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் கல்லூரியின் நிறுவனச் செயலாளர் கம்பம் என் இராமகிருஷ்ணன் 78 பிறந்த நாள் விழா மற்றும் fashion Designing பட்டய படிப்பு தொடக்க விழா கல்லூரியின் இணைச் செயலாளர் என்.எம்.ஆர் வசந்தன் கல்லூரி ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி வசந்தன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் டாக்டர் ஜி ரேணுகா அனைவரையும் வரவேற்று பேசும் போது கல்லூரி வளர்ச்சிக்கு கல்லூரி நிர்வாகத்தின் நிலையான ஆதரவு கல்லூரிக்கு ஊக்கத்தை தருகிறது

கல்லூரியின் நிறுவன செயலர் அவர்கள் குடும்பம் கல்லூரி மற்றும் சமுதாய வாழ்க்கையில் நேர்மையுடனும் ஒழுக்கத்துடனும் கம்பம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொது மக்களின் நன் மதிப்பை பெற்று சிறந்த பண்பாளராக உள்ளார் இவ்வாறு அவர் பேசினார். இதனைத் தொடர்ந்து
Dipoloma in fashion Designing ஆடை வடிவமைப்பு என்ற பட்டய படிப்பிற்கான தொடக்க விழா நிகழ்ச்சியை கல்லூரி நிறுவனச் செயலர் கம்பம் என் இராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இணை செயலர் என்.எம்.ஆர் வசந்தன் பேசும்போது கல்லூரி நிறுவனச் செயலர் அவர்களின் நன் நடத்தையை பேசி மாணவிகள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் எதிர்காலத்தில் நல்ல கல்லூரி படிப்பை படித்து முடித்து தான் நினைத்த துறையில் வெற்றி பெற்று பெற்றோர் ஆசிரியர் மற்றும் சமுதாயத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்றார் கல்லூரி துணை முதல்வர் டாக்டர் வி வாணி வணிக மேலாண்மையியல் துறைத் தலைவர் டாக்டர் எஸ்.சுசீலா மற்றும் அனைத்து துறை தலைவர்களும் கல்லூரி நிறுவனச் செயலரின் பண்புகள் நலன்கள் சேவைகள் தொண்டுகள் குறித்து விரிவாக விளக்கி பேசினார்கள்

இதன் பின்னர் கல்லூரி முதல்வர் பேராசிரியர்கள் கல்லூரி நிறுவன செயலருக்கு பிறந்தநாள் பரிசினை வழங்கினார்கள் இதனை ஏற்று கல்லூரி நிறுவன செய்லர் கம்பம் ஏன் இராமகிருஷ்ணன் தனது ஏற்புரையில் கல்லூரியில் ஆரம்ப கால நிகழ்வுகள் மாணவிகள் பெற்றோரை வாழ்க்கையில் நேசித்து கல்லூரி பருவ காலத்தில் தொடர் முயற்சியுடன் வாய்ப்பை பயன்படுத்தி ஒழுக்கம் மற்றும் பண்புடன் நம்பிக்கையுடன் குறிக்கோளை கைவிடாது இலக்கை அடைந்து தங்களுடைய எதிர்கால வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்று பேசினார்.

இதனைத் தொடர்ந்து 78 ஆவது இனிய பிறந்தநாளையொட்டி 78 கிலோ எடை கொண்ட கேக் வெட்டி கல்லூரி பேராசிரியர்கள் மாணவிகள் கல்லூரி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டன நிகழ்ச்சியின் ஒரு அங்கமாக மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது கல்லூரியின் பேரவை உறுப்பினர் செல்வி ஜெ.சிந்துஜா நன்றி கூறினார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *