புதுச்சேரி: புதுச்சேரி மாநில ஆல் இந்தியா பிரசன்ட் மீடியா பீப்பிள்ஸ் அசோசியேஷன் மாநிலத் தலைவர் ராஜாராம் குமார் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில்,Adv SIJE SUDEESH அவர்களின் தாயார் வசந்தா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் தமிழ்நாடு மாநில துணைச் செயலாளரும், ஆல் இந்தியா பிரசன்ட் மீடியா பீப்பிள்ஸ் அசோசியேஷனின் சட்ட ஆலோசகருமானAdv SIJE SUDEESH அவர்கள் புதுச்சேரியில் சிறப்பு அன்னதானம் வழங்கினார்.

இந்த நிகழ்வில் பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்று உணவு பெற்றுக் கொண்டனர். மனிதநேய நோக்கத்துடன் நடைபெற்ற இந்த அன்னதான சேவையை பொதுமக்கள் பாராட்டி, வசந்தா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளையும், சமூக சேவையில் தொடர்ந்து ஈடுபட்டு வரும்Adv SIJE SUDEESH அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

சமூக அக்கறையையும் மனிதநேய பண்பையும் வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த அன்னதான நிகழ்ச்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *