துறையூர் ஜீலை -29
திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை மண்டல நகராட்சி நிர்வாக இயக்குனர் சரவணன்,மண்டல நகராட்சி செயற்பொறியாளர் மாதவன் ஆகியோர் 29-07-2026அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.கடந்த ஆட்சியில் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சராக இருந்த கே.என்.நேரு 25. 06. 2025 அன்று கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.11.25 கோடி மதிப்பீட்டில் துறையூர் பேருந்து நிலையத்தை புனரமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.
நிர்வாக காரணங்களால் இப்பணிகள் காலதாமதம் ஆனதாக கூறப்படுகிறது. தற்போது சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழக ஆட்சி நடந்து வருகிறது. ஏற்கனவே துறையூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் துணை சபாநாயகருமான ரவிசங்கர் பேருந்து நிலைய கட்டுமான பணிகள் ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கினார்.தற்போது மண்டல அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
இதில் நகராட்சி ஆணையர் கண்ணன்,நகராட்சி பொறியாளர் செந்தில்குமார், உதவி பொறியாளர் ஆதித்யன், துப்புரவு ஆய்வாளர் மோகன்ராஜ், ஒப்பந்ததாரர் வினோத் ஆகியோர் உடனிருந்தனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்