மன்னார்குடி., ஜூலை 29.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நகரின் அனைத்து பகுதிகளிலும் கடந்த பல மாதங்களாக பாதாள சாக்கடைக்கு குழி தோண்டும் பணி நடைபெற்று வருகிறது . இது ஒருபுறம் இருக்க மன்னார்குடி நகராட்சி நிர்வாகம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மழைநீர் வடிகால் என்று சொல்லிக்கொண்டு அதில் சாக்கடைகள் ஓடவிட்டு பாதாள சாக்கடை பணிகள் நடைபெறும் போது சாக்கடைகளை தூர்வாரி வீட்டின் ஓரங்களில் கழிவுகளை குவித்து வைத்துள்ளது .
நடைபாதையில் உள்ள கற்களை அகற்றி குழந்தைகள் , முதியோர் தடுமாறி சாக்கடையில் விழுந்து காயங்கள் ஏற்படும் நிலை உள்ளது . ஒருபுறம் பாதாள சாக்கடை முழுமையாக நிறைவு பெறாமல் குண்டும் குழியுமாகவும் மறுபுறம் சாக்கடை கழிவுகளை கொட்டி பொதுமக்கள் சாலையில் செல்ல முடியாமல் அவதியுறுகின்றனர் .
இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் கேள்வி கேட்டபோது சாக்கடை கழிவுகளை காய்ந்த உடன் எடுத்து விடுகிறோம் என்று கூறி 20 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது .
சாக்கடை கழிவுகள் காய்ந்து ஆடி மாத காற்றில் சாலையில் செல்வோர் மீது மண்படலமாக தூவி வருகிறது ஆனால் இதுவரை நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாமல் அலட்சியம் காட்டுகிறது. உடனடியாக நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர் .