நாகப்பட்டினம்
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் புறாக்கிராமம் அரசு மேல்நிலை பள்ளியில் நாகை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் பசுபதி தலைமை தாங்கினார்.
உதவி தலைமை ஆசிரியர் சிவசங்கரி முன்னிலை வகித்தார். இதில் நாகை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சுப்புலெட்சுமி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சமூக பணியாளர் பிரவீன் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களிடம் போதைபொருட்களின் வகைகள், அவற்றால் ஏற்படும் உடல், மன மற்றும் சமூக பாதிப்புகள், போதை தொடர்பான குற்றங்கள் மற்றும் அதற்கான தண்டனைகள் குறித்தும், போக்ஸோ சட்டம், சாலை பாதுகாப்பு விதிகள், அலைபேசி பயன்பாட்டில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள், சைபர் குற்றங்கள் மற்றும் அவற்றிற்கான தண்டனைகள், அரசின் இலவச உதவி எண்கள் உள்ளிட்ட பல்வேறு சட்ட விழிப்புணர்வு தகவல்கள் மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.
இதில் திட்டச்சேரி காவல் நிலைய தலைமை காவலர் பிரேமா மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.