அரியலூரில் நடந்தது தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநிலம் தழுவிய மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது
அரியலூர் மாவட்டத்திற்கான பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் அரியலூர் அண்ணா சிலை அருகே நடந்தது காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு திட்டத்தோடு இணைத்திடுக காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் என்கிற போராட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெருந்திரள் முறையீட்டு ஆர்ப்பாட்டம் நடந்தது
பெருந்திரள் முறையீட்டு ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் வேம்பு தலைமை தாங்கினார் கோரிக்கைகளை வலியுறுத்தி காந்திகிருஷ்ணமூர்த்தி பேசினார் அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் வேல்முருகன் போராட்டத்தின் நோக்கங்கள் குறித்து சிறப்புரையாற்றினார் செவிலியர் மேம்பாடு சங்கத்தின் மாநில துணைத்தலைவர் ராகவன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் சுமார் இரண்டு மணி நேரம் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது