. திருவொற்றியூர் ஜூலை 31. எர்ணாவூர் சுனாமி குடியிருப்பு 4வது மாடியில் வசித்து வந்தவர் சுரேஷ் 41 கூலி வேலை செய்து வருகிறார். திருமணமாகவில்லை. நேற்று வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்த அவர் மது அருந்தியதாக கூறப்படுகிறது.

பின்னர் நள்ளிரவில் வீட்டின் பால்கனியில் அமர்ந்து செல்போனை பார்த்துக் கொண்டிருந்தபோது. எதிர்பாராத விதமாக மாடியில் இருந்து தவறி கீழே தலை குப்புற விழுந்துள்ளார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறியது. உடனே சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர். ஆனால் வெகு நேரம் ஆகியும் ஆம்புலன்ஸ் வராததால் உடனடியாக பக்கத்தில் இருந்து ஆட்டோவில் ஏற்றி அவரை சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார் . சம்பவம் குறித்து எண்ணூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *