கரூர் செய்தியாளர் மரியான் பாபு
கரூர் குறுவட்ட தடகள & குழு விளையாட்டில் அதிக எண்ணிக்கையிலான போட்டிகளில் கரூர் சேலம் பைபாஸ் சாலையில் அமைந்துள்ள பரணி பார்க் பள்ளி மாணவ,மாணவிகள் ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பட்டம் வென்றனர்.வெற்றி பெற்ற வீர, வீராங்கனைகளுக்கும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் பரணி பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பரணி கல்வி குழும தாளாளர் எஸ்.மோகனரெங்கன் தலைமை தாங்கினார். செயலர் பத்மாவதி மோகனரெங்கன், அறங்காவலர் சுபாஷினி அசோக்சங்கர் முன்னிலை வகித்தனர்.உடன் ஆசிரியர்கள்,மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.