ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகேயுள்ள எண்ணமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
அந்தியூர் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ஹரிபாஸ்கர் கலந்து கொண்டு, எண்ணமங்கலம் சுகாதார நிலையத்துக்குட்பட்ட பல்வேறு இடங்களிலிருந்து வந்திருந்த 50 கர்ப்பிணிகளுக்கு, ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கினார்.
அப்போது, எண்ணமங்கலத்தில் செயல்படாமல் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு சொந்தமான இடத்தை, ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வழங்கி, கூடுதல் கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எடுக்க வேண்டும் என டாக்டர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மேலும், நாள்தோறும் சுகாதார நிலையத்துக்கு நோயாளிகளின் கூட்டம் அதிகரித்து வருவதால், கூடுதலாக செவிலியர்களை நியமிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.
இதில், அந்தியூர் வட்டார மருத்துவ அலுவலர் சக்தி கிருஷ்ணன், டாக்டர்கள் சதீஸ்குமார், சரவணபிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.