அரியலூரில் நடந்தது அரியலூர் வடக்கு ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாக செயற்குழு கூட்டம் வடக்கு ஒன்றிய செயலாளர் ரவிவழவன் தலைமையில் நடந்தது மாவட்ட செயலாளர் அங்கனூர்சிவா சிறப்புரையாற்றி விரைவில் நடைபெறவுள்ள தமிழ் தேசிய மாநாடு குறித்து விளக்கி பேசினார் அதற்கான அழைப்பிதழை வழங்கினார்
வடக்கு ஒன்றிய செயலாளர் ரவிவழவன் பெற்றுக் கொண்டார் முகாம்கள் தோறும் துண்டறிக்கை வழங்குவது மாநாட்டிற்கு வாகனங்கள் ஏற்பாடு எவ்வளவு செய்வது சுவர் விளம்பரங்கள் எழுதுவதை தீவிரப்படுத்துவது எழுச்சித்தமிழர் அவர்களை பேஸ்புக் வலைதளங்களில் ஒருமையில் பேசி மீது மாவட்ட காவல் துறை கண்டறிந்து கடுமையான சட்டத்தில் நடவடிக்கை எடுக்குமாறு இந்த செயற்குழு கேட்டுக்கொள்கிறது என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் ஏ எஸ் ஆர் மருதவாணன் க.க ராஜேந்திரன் மாவட்ட துணைச் செயலாளர் பூமிநாதன் தமிழரசன் செல்வராஜ் சதீஷ்குமார் ராமச்சந்திரன் பாக்யராஜ் மகளிர் அணி பட்டயத்தம்மாள் மனலேரிராஜா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் ஒன்றிய துணைச் செயலாளர் கருணாநிதி அனைவருக்கும் நன்றி கூறினார்