திருவெற்றியூர் மேற்கு பகுதி அண்ணாமலை நகர் கார்கில் நகர் சார்லஸ் நகர் உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட ஊர்கள் மற்றும் வேலம்மாள் பள்ளி சத்ய சாய் பள்ளி கே சி பி நிறுவனம் செல்லும் ஊழியர்கள் பயன்படுத்தி வந்த அண்ணாமலை நகர் ரயில்வே பாதையை அடைத்து சுரங்கப்பாதை அமைப்பதாக கூறி வீடுகள் கடைகளை எல்லாம் இடித்து மக்களை ஏமாற்றி தற்போது சுரங்கப் பாதை பணியையும் நிறுத்தி விட்டு கிடப்பில் போட்டதை கண்டித்தும் தற்போது திடீரென கடந்த வாரம் நடந்து செல்லும் பாதையை அடைத்து பள்ளி மாணவ மாணவிகள் பணிக்கு செல்வோர் முதியோர் ஊனமுற்றோர் நடந்து செல்வதற்கு கூட அனுமதிக்காமல் தடுப்புகளை அமைத்து உள்ளதை கண்டிக்கும் விதமாக இன்று அண்ணாமலை நகர் வேலம்மாள் பள்ளி அருகே 15க்கும் மேற்பட்ட ஊர் மக்கள் நிர்வாகிகள் அனைத்துக் கட்சியினர் ஒன்று திரண்டு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

அண்ணாமலை நகர் ரயில்வே சுரங்கப்பாதை பணியை கிடப்பில் போட்டுள்ளதால் பள்ளி மாணவ மாணவிகள் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் சுற்றி வந்து பள்ளிக்கு செல்லும் அவல நிலைல அதிகாரிகளை கண்டித்தும் அண்ணாமலை நகர், சார்லஸ் நகர், கார்கில் நகர், வெற்றி விநாயகர் நகர் ,கிளாஸ் பேக்டரி, உள்ளிட்ட பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்றிணைந்து கையில் பதாகைகளுடன் கண்டன கோஷங்களை எழுப்பி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் 15 க்கும் மேற்பட்ட ஊர்களின் தலைவர்கள் பிரதிநிதிகள் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அறிவிப்பு

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *