தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பழனிசெட்டிபட்டி பேரூராட்சி மன்ற தலைவர் வி.பி.ஏ. மிதுன் சக்கரவர்த்தி ஏற்பாட்டில் பழனிசெட்டிபட்டி பஸ் நிறுத்தம் அருகே தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் குத்துவிளக்கு ஏற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு பழனி செட்டிபட்டி பேரூராட்சி மன்ற தலைவர் வி.பி.ஏ. மிதுன் சக்கரவர்த்தி முன்னிலை வகித்தார் தமிழக முன்னாள் முதல்வரும் போடிநாயக்கனூர் சட்டமன்றh உறுப்பினருமான ஒபன்னீர்செல்வம் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று கலைஞர் நூலகத்தில் உள்ள புத்தகங்களை பார்வையிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் போடிநாயக்கனூர் எல்.லட்சுமணன் தேனி ஆர்.டி. கணேசன் நகரச் செயலாளர்கள் தேனி சூர்யா பாலமுருகன் என்.சி. நாரயண பாண்டியன் ஒன்றிய செயலாளர்கள் வீரபாண்டி இரத்தின சபாபதி ஐயப்பன் பூதிப்புரம் பேரூராட்சி மன்ற தலைவர் கவியரசு பால்பாண்டியன் வீரபாண்டி கீதா சசி திமுக இளைஞர் அணி சசி உள்பட திமுக நகர பேரூர் திமுக நிர்வாகிகள் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *