திருவாரூர் மாவட்டம், புலிவலம் லெட்சுமி நகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு லெட்சுமி கணபதி ஆலயத்தில் ஆடி மாத சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு நேற்று (02.08.2026) சிறப்பு வழிபாடு. லெட்சுமி கணபதிக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் மகா அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த லெட்சுமி கணபதிக்கு தீபாராதனை நடைபெற்றது. ஆலயத்தில் திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் தேங்காய் உடைத்து, அருகம்புல் மாலை சாத்தி, மோதகம் உள்ளிட்ட நைவேத்தியங்களை சமர்ப்பித்து வழிபட்டனர். பின் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் பிரசாதம் வழங்கப்பட்டது.