தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 201 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் இரா. வைத்திநாதன் பொதுமக்களிடமிருந்து பெற்றுக் கொண்டார் இந்த கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை புதிய வீட்டுமனை பட்டா வேலைவாய்ப்பு மற்றும் இதர மனுக்கள் என 201 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் பொது மக்களின் கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்
முன்னதாக மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் சார்பாக 8 வகையான காய்கறி விதைகள் அடங்கிய ஆடிப்பட்ட காய்கறிகள் 3 பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.
மேலும் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுக்காக்களிலும் இதேபோன்று காய்கறி விதை தொகுப்புகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. எனவே காய்கறி விதைத் தொகுப்புகள் தேவைப்படும் பயனாளிகள் ரூபாய் 20 தொகுப்பு வீதம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் இரா வைத்திநாதன் தெரிவித்ார் .
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ப . ராஜகுமார் திட்ட இயக்குனர் ஊரக வளர்ச்சி முகமை துஷார் ஸ்ரீகர் ஷீண்டே திட்ட இயக்குனர் மகளிர் வீராச்சாமி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ராமகிருஷ்ணன் பொது தனித்துணை ஆட்சியர் கவிதா கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மகேஷ் மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் கதிர்வேல் நிலம் மாவட்ட வழங்கல் அலுவலர் நல்லையா மாவட்ட மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலர் பாண்டி உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.