திருவொற்றியூர். ஆக3-

ஆவடி காவல் ஆணையாளர் செந்தில்குமார் உத்தரவின் பேரில் செங்குன்றம் துணை ஆணையர் மகேஸ்வரி தலைமையில் தீவிர போதை பொருள் தடுப்பு கண்காணிப்பு குழு செயல்பட்டு வருகிறது

அதன் அடிப்படையில் எண்ணூர் உதவி ஆணையர் வெங்கட்குமார் மற்றும் சாத்தாங்காடு காவல் ஆய்வாளர் அமீர் அலி ஜின்னா தலைமையிலான தனிப்படை போலீசார் ராஜேஷ். கேசவன். ரஞ்சித். அன்பு.உள்ளிட்டோர் அம்பேத்கர் நகர் பெரியார் திடல் பகுதியில் நிலையத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

ஒரிசாவில் இருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்தி வந்து சாத்தாங்காடு பகுதியில் விற்பனை செய்யப்படுவதாக சாத்தாங்காடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில் அம்பேத்கர் நகர் பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்ட பொழுது

அங்கு சந்தேகத்துக்கிடமாக இருவர் மூட்டைகளுடன் இருப்பதை கண்டு விசாரணை செய்த பொழுது விசாரணையில் 21 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இதன் மதிப்பு 10 லட்ச ரூபாயில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து சாத்தாங்காடு காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில். ரபிராஜ் வ/21, ஷேக் சல்மான் வ/29, சரவணன் வ/18, சுரேந்தர் வ/26, புருஷோத்தமன் வ /28, கோகுல் வ/21, தருண் வ/18, கைது செய்யப்பட்ட ஏழு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆச்சார் படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்,

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *