அரியலூரில் நடந்தது காவேரி நீர் எங்கள் உரிமை என்ற முழக்கத்துடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அரியலூர் அண்ணா சிலை அருகே காவிரி நீர் எங்கள் உரிமை என்ற முழக்கத்துடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினரும் அரியலூர் மாவட்ட செயலாளருமான கே நடராஜன் தலைமை தாங்கினார்.

மாவட்ட குழு உறுப்பினர் பி கலியபெருமாள் வருகை தந்த அனைவரையும் வரவேற்றுப் பேசினார். மாவட்ட குழு உறுப்பினர்கள் சிவக்குமார், முருகேஸ்வரி, மருதமுத்து, பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே அணைக்கட்டக்கூடாது. காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பை கர்நாடக அரசு முழுமையாக மதித்து செயல்படுத்த வேண்டும். ஆர்ப்பாட்டத்தில் பேசிய மாவட்ட செயலாளர் கே நடராஜன் காவிரி நதிநீர் பிரச்சினையில் கர்நாடக அரசின் நடவடிக்கைகளை கண்டிக்கிறோம் மேகத்தாதுவில் அணைக்கட்டும் முயற்சி மத்திய மற்றும் கர்நாடகா அரசுகள் கைவிட வேண்டும் என வலியுறுத்தி சிறப்புரையாற்றினார்.

மேலும் மாவட்ட துணைச் செயலாளர் தண்டபாணி, மாவட்ட பொருளாளர் ஆறுமுகம் நிர்வாகிகள் பன்னீர்செல்வம், மணிகண்டன் உள்ளிட்ட ஒன்றிய நகர பேரூர் கழக கிளை கட்சி பொறுப்பாளர்கள் தொண்டர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். சுமார் 2 மணி நேரம் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *