சென்னை நங்கநல்லூர் நேரு அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இருந்து மாரத்தான் போட்டியை மாண்புமிகு நீதிபதிதமிழ் செல்வி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த மாரத்தான் போட்டி 5 கி.மீ. மற்றும் 10 கி.மீ. என இரண்டு பிரிவுகளாக நடைபெற்றது. பள்ளி மாணவர்கள், இளைஞர்கள்,பெண்கள், முதியவர்கள் என 1,500-க்கும் அதிகமானோர் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.நங்கநல்லூர், குரோம்பேட்டை, பல்லாவரம், மீனம்பாக்கம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் மற்ற மாநிலங்களில் இருந்தும் ஓட்டக்காரர்கள் கலந்து கொண்டு உடற்பயிற்சியின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

போட்டி நிறைவில் வெற்றி பெற்றவர்களுக்கு நீதிபதி தமிழ் செல்வி பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி வாழ்து தெரிவித்தார்.ஆரோக்கியமான வாழ்கையை பின்பற்றுவதும் சமூகத்திற்கு நல்லது. Chennai Connects அமைப்பின் இந்த முயற்சி பாராட்டத்தக்கது என நீதிபதி செல்வி பேசினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *