திருத்துறைப்பூண்டி., ஆக.03
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பழையங்குடி ஊராட்சி செயல் அலுவலர் அவர்களிடம் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய துணைச் செயலாளர் ராஜ்மோகன் அவர்கள் தலைமையில் 100 நாள் பயனாளிகளுக்கும் முழுமையாக 100 நாள் வேலை திட்டம் வழங்கப்பட வேண்டும்.
100 நாள் வேலைத்திட்டம் வழங்காமல் இருந்து வரும் நிலையில் உடனடியாக அனைத்து பயனாளிகளுக்கும் 100 நாள் வேலை திட்டம் வழங்கிட வேண்டும் என கோரிக்கையை முன்வைத்து திருத்துறைப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் ஊராட்சி மன்ற செயல் அலுவலரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பழையங்குடி ஊராட்சி செயல் அலுவலரிடம் 100 நாள் வேலை திட்டத்தை முழுமையாக அனைத்து பயனாளிகளுக்கும் வழங்க வேண்டும் என கோரிக்கையை முன்வைத்து 200க்கும் மேற்பட்ட பெண்கள் கோரிக்கை மனுவினை வழங்கினர்.
இந்நிகழ்வில் முன்னாள் கிளைச் செயலாளர் இரணியன், கிளைச் செயலாளர் முருகேசன், கிளைச்செயலாளர் ஆனந்தன், பழையங்குடி விவசாய தொழிலாளர் சங்க நிர்வாக குழு உறுப்பினர், நாகூரான் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டு 100 நாள் வேலை வழங்க வேண்டும் என செயல் அலுவலரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.