கர்நாடக அரசு மேகதாது அணை கட்டக்கூடாது என்கிற கோரிக்கையை வலியுறுத்தி டெல்லியில் உள்ள மத்திய நீர்வளத்துறை அமைச்சர் அலுவலகத்தை முற்றுகையிடுவது என்று காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் கேவிஇளங்கீரன் தலைமையில் அரியலூர் மாவட்ட தலைவர் தூத்தூர் தங்க தர்மராஜன் தஞ்சை கோதண்ட ராமசாமி உட்பட 30க்கும் மேற்பட்டோர் சென்னையில் இருந்து டெல்லி நோக்கி ரயிலில் சென்றனர்
இவர்களை மகராஷ்டிரா மாநில போலீசார் நாக்பூர் ரயில் நிலையத்தில் கைது செய்து பின்பு குண்டு கட்டாக தூக்கி சென்று நாக்பூர் காவல் நிலையத்தில் சிறை வைத்தனர் பின்பு அவர்களை விடுதலை செய்து நாக்பூர் ரயில் நிலையத்தில் சென்னை செல்லும் ரயிலில் ஏற்றி விட்டனர்
பின்பு அவர்கள் சென்னை வந்து அங்கிருந்து குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் அரியலூர் ரயில் நிலையம் வந்தனர் அரியலூர் ரயில் நிலையத்தில் அவர்களுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது செய்தியாளர்களிடம் பேசிய தூத்தூர் தங்க தர்மராஜன் தமிழக முதல்வர் விஜய் அனைத்து கட்சி கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் மேகதாது அணை கட்டுவதை உடனடியாக தடுத்து நிறுத்திட ஆவன செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் உடனே எடுக்க வேண்டும் என செய்தியாளர்களிடம் தங்க தர்மராஜன் தெரிவித்தார்