தர்மபுரி
தர்மபுரி ரயில் நிலையத்தில் பயணிகளின் நலன் மற்றும் ரயில் சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் தர்மபுரி ரயில் பயணிகள் சங்கம் அமைப்பது தொடர்பான முதல் கட்ட ஆலோசனைக் கூட்டம் தர்மபுரியில் நடைபெற்றது.

கூட்டத்தில் ஓய்வு பெற்ற மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு. கே. பழனிச்சாமி, அரிமா சங்க முன்னாள் தலைவர் திரு. என். விஜேந்திர பாபு, ஓய்வு பெற்ற முன்னாள் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் திரு. டி.வி. பாலாஜி, ஓய்வு பெற்ற முன்னாள் தலைமை ஆசிரியர் திரு. எம். கோபாலகிருஷ்ணன், ஓய்வு பெற்ற தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் திரு. பி.வி. வித்யானந்த், ராதா ஸ்டோர் பிரதீப், முன்னாள் ரயில்வே கோட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர் ஜெகநாதன், வழக்குரைஞர் விமல், வெங்கடேஷன், ஏ. பீட்டர், செல்வம், பொம்மிடி ரயில் பயணிகள் சங்க செயலாளர் பா. ஜெபசிங், பொருளாளர் எம். முனிரத்தினம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கான ஏற்பாடுகளை வழக்குரைஞர் எல்.கே. சிவக்குமார் செய்திருந்தார்.
கூட்டத்தில், தர்மபுரி ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு கூடுதல் வசதிகளை ஏற்படுத்துதல், பயணிகளின் கோரிக்கைகள் மற்றும் தேவைகளை ரயில்வே நிர்வாகத்திடம் முறையாக கொண்டு சேர்த்தல், ரயில் சேவைகளை மேம்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் ஆகியவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.


மேலும், விரைவில் சங்கத்தின் நிர்வாகப் பொறுப்பாளர்களைத் தேர்வு செய்து, சங்கத்தை சட்டப்பூர்வமாக பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது என முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *