கலைஞர் 8–ஆம் ஆண்டு நினைவுநாள் –அமைதிப் பேரணி அழைப்பிதழ் !
தமிழகத்தில் ஐந்து முறை முலமைச்சராக – உலகத் தமிழர்களின் ஒப்பற்றத் தலைவராக, அகில இந்திய அரசியலில் சிறந்த வழிகாட்டியாகத் திகழ்ந்து, தமிழக வரலாற்றில் தமக்கென்று ஒரு முத்திரைப் பதித்துக் கொண்ட முத்தமிழறிஞர் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின் 8வது நினைவுநாளினையொட்டி, புதுச்சேரி மாநில திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில், 07.08.2026 வெள்ளிக்கிழமை அன்று காலை 09.00 மணியளவில் புதுச்சேரி சுதேசி மில் அருகில் கழகத்தினர் அனைவரும் ஒன்றிணைந்து அமைதி பேரணியாக சென்று அண்ணா சிலை அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்த இருக்கிறோம்.
ஆகவே, நமது மாநில கழக நிர்வாகிகள், முன்னாள், இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், தொகுதி கழகச் செயலாளர்கள், சார்பு அணிகளின் அமைப்பாளர்கள், தலைவர்கள், துணைத் தலைவர்கள், துணை அமைப்பாளர்கள், கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் என அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு மரியாதை செலுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவண்,
இரா. சிவா,
மாநில கழக அமைப்பாளர்,
புதுச்சேரி மாநில தி.மு.கழகம்