கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் தமிழ்நாடு பிக்கிள்பால் பிரீமியர் லீக் சீசன் 2 போட்டிக்கான கோப்பை மற்றும் ஜெசி அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது இதில் திரைப்பட நடிகர் விக்ரம் கலந்து கொண்டு கோப்பையை அறிமுகப்படுத்தி வைத்தார் இந்த தமிழ்நாடு பிக்கிள்பால் பிரீமியர் லீக் சீசன் 2வில் சென்னை உட்பட 12 அணிகள் பங்கேற்க இருப்பது குறிப்பிடத்தக்கது சென்னை அணியின் உரிமையாளர் நடிகை வரலட்சுமி உரிமையாளராக இருப்பதும் குறிப்பிடத்தக்கது

இதில் சென்னை கோயம்புத்தூர் கடலூர் காஞ்சிபுரம் திண்டுக்கல் திருநெல்வேலி மதுரை ராமநாதபுரம் திருச்சி நீலகிரி ஓசூர் சேலம் ஆகிய 12 அணிகள் பங்கேற்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது இந்த போட்டிக்கான வீரர்கள் ஏலமும் இன்று துவங்கியது

தமிழ்நாடு முழுவதிலும் உள்ள மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 12 அணிகளும் அறிமுகப்படுத்தப்பட்டது இந்த நிகழ்ச்சியில் சியான் விக்ரம், வரலட்சுமி சரத்குமார், கீர்த்தி பாண்டியன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் உட்பட அணிகள் உரிமையாளர்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டன.

இதில் மொத்தம் 168 வீரர்கள் இடம்பெறும் இந்த லீக்கிற்கு, ஒவ்வொரு அணியும் 14 வீரர்களைக் கொண்ட குழுவாக அமைக்கப்படும். மொத்த ஏலத்தொகையான 36 லட்சம் ரூபாய் ஆகும் .

இந்நிகழ்ச்சியில் நடிகர் சியான் விக்ரம் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார். அவருடன், தமிழ்நாடு பிக்கிள்பால் சங்கத்தின் தலைவர் கே. மோகித் குமார் மற்றும் விளையாட்டுத் துறையைச் சேர்ந்த பிற முக்கியப் பிரமுகர்களும் இணைந்தனர்.

மேலும் இந்த அனைத்து போட்டிகளும் செப்டம்பர் 17 முதல் 20 வரை, சென்னையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ ஏட்ரியத்தில் நடைபெறவுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *