துறையூர் ஆகஸ்ட்
திருச்சி மாவட்டம் துறையூர் கோல்டன் சிட்டி ரோட்டரி சங்கத்தின் முதல் மாதாந்திர கூட்டம் துறையூர் தெப்பக்குளம் எதிரில் உள்ள ஸ்ரீ கௌரி திருமண மஹாலில் 01-08-2026 அன்று சங்க தலைவர் Rtn.Adv.T.கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது.
செயலாளர் பொறி.எம்எஸ்.பிரபு, பொருளாளர் மாஸ் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் மற்றும் மூத்த உறுப்பினர்களின் மேலான ஆலோசனைகள் ஏற்கப்பட்டு தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்தி வரும் சேவை திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவதென முடிவு செய்யப்பட்டது .சங்கத்தை சிறப்பாக வழி நடத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டது. சங்கம் தொடர்ந்து சிறப்பாக நடத்தி வரும் மனநல மருத்துவ முகாமை தொடர்ந்து சிறப்பாக நடத்துவது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.முகாம் தொடர்ந்து சிறப்பாக நடைபெற உறுதுணையாக உள்ள அனைத்து ரோட்டரி சொந்தங்களுக்கும் அசோக் பெரியசாமி நன்றி தெரிவித்தார்.
சங்கத்தின் பொருளாளர் மாஸ் தினேஷ்குமார் தனது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு விருந்தளித்தார்.அவருக்கு சங்கத்தின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும் தெரிவிக்கப்பட்டது.இதில் முன்னாள் சங்க தலைவர்கள், மூத்த உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்