தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டி பேரூராட்சியில் பேரூராட்சி துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் இரா வைத்திநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் இந்த ஆய்வின் போது வடுகபட்டி பேரூராட்சியில் ரூபாய் 1 கோடியே 60 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு வரும் அறிவு சார் மைய கட்டிடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்

வடுகபட்டி பேரூராட்சிக்கு வைகை அணையில் இருந்து குடி நீர் வழங்கிட மேற்கொள்ளப்பட்டு பணிகளை பார்வையிட்டதுடன் 3 இலட்சம் கொள்ளளவு கொண்ட மேல் நிலை நீர் தேக்கத் தொட்டி கட்டப்பட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் கவிஞர் கண்ணதாசன் நூலகத்திற்கு சென்று பார்வையிட்டு தினசரி வாசகர்களின் வருகை குறித்து கேட்டறிந்துடன் தேவையான அளவு புத்தகங்களை வைத்து பராமரித்துடவும் வாசகர்களுக்கு தேவையான உட் கட்டமைப்பு வசதிகளை தக்க முறையில் பராமாரித்திடவும் பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் இரா வைத்திநாதன் அறிவுறுத்தினார்

இந்த ஆய்வின் போது மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் வில்லியம் ஜேசுதாஸ் உதவி செயற்பொறியாளர் அம்சா செயல் அலுவலர் கல்பனா தேவி பேரூராட்சி மன்ற தலைவர் சி. நடேசன் தலைமை இளநிலை உதவியாளர் ஒம்முருகன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *