தென்காசி : ஆக – 8

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் அமைந்துள்ள சர்தார் ராஜா பொறியியல் கல்லூரியில் பயிலும் மூன்றாம், நான்காம் ஆண்டு மாணவ மாணவிகளுக்கு GATE தேர்வு விழிப்புணர்வு நிகழ்ச்சி செமினார் அரங்கத்தில் வைத்து மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் முனைவர் ஜெயக்குமார் தலைமை ஏற்று நிகழ்ச்சி தொடங்கி வைத்து பேசுகையில் பொறியியல் படிக்கும் மாணவ மாணவிகளின் எதிர்கால வாழ்விற்கு GATE தேர்வு எந்த அளவிற்கு முக்கியமானது என்பது குறித்து விளக்கமாக உரையாற்றினார்.இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் நிர்வாக இயக்குனர் கனக பாண்டியன் முன்னிலை வகித்தார்.

இந்த GATE தேர்வு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஸ்ரீமான் மாணவ மாணவியர்களிட உரையாற்றும் போது GATE தேர்வு என்றால் என்ன? அந்த தேர்வினை எப்படி எதிர்கொள்ள வேண்டும் எளிய முறையில் படித்து எப்படி தேர்ச்சி பெறலாம் இந்த GATE தேர்வில் தேர்ச்சி பெற்றால் அடுத்த கட்ட படிப்பு மற்றும் எதிர்கால வேலை வாய்ப்புகளை எவ்வாறு தேர்வு செய்யலாம் என்பது குறித்து எடுத்துரைத்தார்.

இந்நிகழ்ச்சியினை மின் மற்றும் மின்னணுவியல் துறை பேராசிரியர் தவச்செல்வம் ஒருங்கிணைப்பு செய்தார்.இதில் அனைத்து துறை தலைவர்கள்,பேராசிரியர்கள், மற்றும் மூன்றாம் நான்காம் ஆண்டு மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *